ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார் காலமானார்! தலைவர்கள் இரங்கல்!

grmoopanarphoto - 2026

ஜி.ஆர் மூப்பனார் காலமானார். மறைந்த ஜி.கே மூப்பனாரின் சகோதரரும்,த.மா.கா தலைவர் ஜி.கே வாசனின் சித்தப்பாவுமான ஜி.ரெங்கசாமி மூப்பனார் (65) உடல் நலக் குறைவால்  இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜி.ஆர்.மூப்பனார் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில்…. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அதன் தலைவர் ஜி.கே.வாசனின் சித்தப்பாவுமான ஜி.ஆர். மூப்பனார் என்று அழைக்கப்பட்ட ஜி.ரங்கசாமி மூப்பனார் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரான ஜி.ஆர். மூப்பனார் கல்வி, கலை, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாரதியார் பேரவையின் தலைவராக செயல்பட்டு பாரதியாரின் பெருமைகளை பரப்பி வந்தார். பார்க்கவ குல சங்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்து அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக உண்மையாக பங்களித்து வந்தார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜி.ஆர். மூப்பனாரின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு ஆகும். ஜி.ஆர். மூப்பனாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories