சிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி!

Published:

nirmaladevi - 2026

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி ஜாமீன் கிடைத்த நிலையில், ஜாமீன் கிடைத்து 8 நாட்களுக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி இன்று விடுதலையானார்.

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்தார்.

பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப் பட்டு,, சில முறை ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், மார்ச் 12ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அவர் ஊடகங்கள் எதிலும் பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. ஆயினும் அவரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் எவரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவரது சகோதரர் ஜாமீன் அளிக்க, 8 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தனது உடைமைகளுடன் அவர், மதுரை சிறையில் இருந்து இன்று காலை வெளியே வந்தார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img