சென்னையில் கோர விபத்து! டாரஸ் லாரிகள் மோதி சிக்னலில் நின்ற இருவர் உயிரிழப்பு!

Published:

lorryaccident twodeaths - 2026

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று இன்னொரு லாரி மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்! சென்னையில் திங்கள் கிழமை நேற்று காலை நிகழ்ந்த இந்த விபத்து, சாலையில் நடந்துசெல்வோர், வாகன ஓட்டிகள் என அனைவரையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை செங்குன்றம் சோத்துப்பாக்கம் புறவழி சாலை சந்திப்பில் நேற்று காலை 9 40க்கு வேகமாக சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை சந்திப்பில் கடக்க காத்திருந்த மற்றொரு டாரஸ் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அந்த டாரஸ் லாரி மோதியது

இதில் இருசக்கர வாகனத்தில் மகன்களுடன் சென்ற சோழபுரத்தை எடுத்த பஞ்செட்டி சர்ச்சை தெருவைச் சேர்ந்த ஜான்சன் (47)ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சந்திர பாபு ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

ஜான்சன் உடன் சென்ற அவரது இரண்டு மகன்கள் காயங்களுடன் தப்பினர். பலத்த காயமடைந்த டாரஸ் லாரி ஓட்டுநர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்!

சென்னை கிண்டியில் இதே போல் இரு வருடங்களுக்கு முன்னர் பிரேக் பிடிக்காமல் லாரி ஒன்று கல்லூரி மாணவிகள் மீது மோதி 3 பேர் உயிரிழந்தனர். சாலை சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது, இவ்வாறு கட்டுப்பாடு இழந்த கனரக வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் நேர்ந்ததுண்டு. இருப்பினும் கவனக் குறைவுகள் இது போன்ற விபத்துகளை ஏற்படுத்துகின்றன. மோட்டார் வாகன ஆய்வில் கடும் கெடுபிடி கடைபிடிக்கப் பட்டால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img