IMG 20220408 WA0031 - 2026

இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ கஞ்சா வாகனத்துடன் பறிமுதல்..

சற்றுமுன்

வேதாரண்யத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்த கடலோரக் காவல் நிலைய போலீஸார் அகதியாக தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்தவர் உள்பட மூவர் உள்பட 3 பேரை இன்று கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதானவர்கள் தேசிய போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் இன்று காலை ஒப்படைத்தனர்.

வேதாரண்யம் கடல் வழியாக வியாழக்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார் நேற்று இரவு  கண்காணித்தனர்.

அப்போது, ஆறுகாட்டுத்துறை உப்பனாற்றின் கரை பகுதியில் நின்ற வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டனர்.அதில் 9 மூட்டைகளில் 270 கிலோ கஞ்சா இருந்தது,

இதையடுத்து ஆறுகாட்டுத்துறை, சுனாமி குடியிருப்பு வாகன ஓட்டுநர் சுரேஷ் (40) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடந்த விசாரணையின் பேரில் தலைமறைவாக இருந்த இருவர் இன்று காலையில் பிடிபட்டனர்.இவர்களில் ஒருவர்  தமிழகத்தில் அகதியாக வந்து தங்கியுள்ள காந்தரூபன் (52) இலங்கையைச் சேர்த்தவர் என்பதும், மற்றவர் ஆன் காட்டுத்துறையைச் சேர்ந்த பாரதிதாசன் ( 40) என்பதும் தெரிய வந்தது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த நிலையல்,பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதான மூவரும் தேசிய போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் இன்று  காலை ஒப்படைக்கப்பட்டனர்.

IMG 20220408 WA0031 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.