மதுரை மசூதியில்… வாக்கு சேகரிக்க விடாமல் துரத்தியவர்கள் யார்?! செல்லூர் ராஜு ‘பகீர்’ தகவல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

Sellur Raju - 2026

மதுரையில் அண்மையில் அதிமுக வேட்பாளருடன் ஓட்டு சேகரிக்க பள்ளிவாசலுக்கு சென்றபோது அதிமுக.,வினர் பள்ளிவாசலில் இருந்து அங்கிருந்தவர்களால் விரட்டப் பட்டனர் என்று ஒரு செய்தியும் வீடியோவும் வெளியானது

மதுரை புதூரில் உள்ள பள்ளிவாசலில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவினருடன் ஓட்டு கேட்டு சென்றார்! அப்போது அதிமுகவினரை பள்ளிவாசலில் இருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது! பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் என்று காரணம் சொல்லி அவர்கள் அதிமுகவினரை விரட்டியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் வெளியானது

இந்நிலையில் இது குறித்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் ரகசியமாகக் கூறியபோது எங்கள் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஏற்பாட்டின் பேரில் தான் பள்ளிவாசலுக்கு நாங்கள் வாக்கு கேட்டு சென்றோம்! பள்ளிவாசல் நிர்வாகம் எங்களை அனுமதித்தது! ஆனால் அதில் உறுப்பினராக உள்ள எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்! ஏனெனில் அவர்கள் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இதனால் அவர்கள் எதிர்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று கூறினார்!

எஸ்டிபிஐ கட்சி, அரசியல் முகமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய மதச்சார்பு பிரிவினைவாத அமைப்பு என்பதும், தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் இந்து மதத்தை அகற்றி இஸ்லாமிய மயமாக்குவோம் என்ற மதவெறிக் கருத்துகளைக் கொண்ட அமைப்பு என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.