சென்னை அணிக்கு முதல் தோல்வி! 37 ரன்னில் மும்பை வெற்றி!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

csk mi live updates - 2026

ஐபிஎல் டி20 போட்டியில், நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக சூர்யா குமார் யாதவ் 59 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேதர் ஜாதவ்-தோனி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் சென்னை அணியால் 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, சூர்ய குமார் நங்கூரமிட்டு விளையாட,பொல்லார்ட், ஹர்திக் அதிரடி காட்ட, சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டளன.

மிட்சல் மெக்லெனஹனுக்குப் பதிலாக பெஹ்ரென்ட்ரூப்பும், மாயங் மார்கண்டேவுக்குப் பதிலாக ராகுல் சஹாரும் இடம் பிடித்தனர். சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மிட்சல் ஸ்டென்னருக்குப் பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.