நம்மை இழிவு செய்யும் திமுக கூட்டணியை புறக்கணிப்போம்! வன்னிய இளைஞர்கள் அக்னிசபதம்!

Published:

vanniar support - 2026

வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மனையும் , வன்னிய பெண்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாக பேசிவந்த நிலையில் அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பது வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வெளிப்படுத்தும் விதமாக திமுக கூட்டணியை தோல்வியடையச் செய்வோம் என்று வன்னிய இளைஞர்கள் நெருப்பின் மீது சத்தியம் செய்து சபதம் ஏற்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் ஏப்.11 வியாழன் இரவு 8  மணிக்கு நடைபெற்றது. வன்னிய சத்திரிய சங்கத்தின் மாநில தலைவர்  அரங்க சண்முகம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

அவர் திமுக.,வுக்கு எதிரான சபதங்களை முன்மொழிய வன்னியர்  சமூகத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அதனை வழிமொழிந்து சபதமேற்றனர்.

இந்து மதத்தை இழிவு செய்யும் திமுகவை புறக்கணிப்போம். 

சூரிய குல க்ஷத்ரியரான ராமரை நிந்தனை செய்த திமுகவை புறக்கணிப்போம் 

சந்திர குல  க்ஷத்திரியரான கிருஷ்ணரை இழிவு செய்யும் வீரமணியை ஆதரிக்கும் திமுகவை புறக்கணிப்போம் 

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

வன்னியர்களின் குல தெய்வம் திரௌபதி அம்மனை இழிவு செய்த திருமாவளவனை ஆதரிக்கும்  திமுக வை புறக்கணிப்போம் 

இந்து என்றால் திருடன் என்று தப்பு தப்பாய் அர்த்தம் சொன்ன கருணாநிதியின் திமுகவை புறக்கணிப்போம் 

இந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்தும் முக ஸ்டாலினின் திமுகவை புறக்கணிப்போம் 

ஏழுமலையானை இழிவாக பேசிய கனிமொழியையும் திமுகவையும் புறக்கணிப்போம் 

  • என்று அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், நெருப்பின் மீது கைவைத்து சத்தியம் செய்த அவர்கள் திரௌபதி அம்மனையும் வன்னியர் பெண்களையும் இழிவு செய்த திமுக வை வேரோடு வீழ்த்த சபதம் ஏற்றனர்.

இந்நிகழ்வில் பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான வன்னியர்கள் கலந்துகொண்டு நெருப்பின் மீது கைவைத்து உணர்ச்சிமயமாக சபதம் செய்தனர்.

நிகழ்ச்க்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னிய சத்திரிய சங்க தலைவர் அரங்க சண்முகம், வன்னியர் உள்ளிட்ட பல சமுதாய பெண்களையும் திருமாவளவன் இழிவாக பேசியதை திமுக ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார்.

ஒவ்வொரு வன்னியர் கிராமங்களிலும் கோயில் கொண்டிருக்கும் திரௌபதி அம்மனை திருமாவளவன் இழிவு படுத்தியபோதுட தி.க, திமுக இயக்கங்கள் அதனை கண்டிக்காது ரசித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இஸ்லாமியர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் அங்கு இந்து மத திருமண சடங்குகளை இழிவுபடுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்து மதத்தையும் கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் குறிப்பாக வன்னியர் சமூகத்தையும் கேலி செய்யும்   திமுக வை தோல்வியுற செய்வதற்காக இந்த அக்கினி சபதம் எடுக்கப்பட்டதாக அரங்க சண்முகம் கூறினார்.

Related articles

Recent articles

spot_img