வேலூர் தேர்தல் ரத்து செல்லும்!?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Madras High Court in Chennai - 2026

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 4.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

ரத்தான வேலூர் தொகுதி தேர்தலை நடத்தக் கோரி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடுத்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஏ.சி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் சென்னை உயர் நீதிமன்றமத்தில் ஆஜராகி வாதாடினார்.

அப்போது தேர்தல் ரத்து செய்தது செல்லும். தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைக்கு தடை விதிக்க முடியாது. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது என்று வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கில் ஏ.சி.சண்முகம் தரப்பு வாதத்தை முன்வைத்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.