
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியபோது திராவிட கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இது கருத்து சுதந்திரம் என்று அவருக்கு ஆதரவாக பேசின.
ஆனால் அதே நேரத்தில் இசைஞானி இளையராஜா, இயேசு கிறிஸ்து குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு திராவிட இயக்க தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மக்கள் கட்சியினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு ஆர்பாட்டமும் நடத்தினர்.
அன்று வைரமுத்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் இளையராஜா பேசியதும் கருத்து சுதந்திரம் தானே என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



