ஜாதி மோதலைத் தூண்டும் விதமாக தகவல் பரப்பிய 3 பேர் கைது!

Published:

arrested - 2026

ஜாதி மோதலை தூண்டும் விதமாக வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பிய 3 பேர் கடலூர் மாவட்ட போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்  பட்டுள்ளனர்.

ஜாதிய மோதலை தூண்டும் விதமாகப் பேசி வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தொண்டமாந்த்தம் சுந்தரமூர்த்தி (71), காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த அருள்ராஜ் (28), குண்டிய மல்லூர் கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் எச்சரிக்கை செய்தும் எச்சரிக்கையை மீறி இதுபோன்ற வீடியோக்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து மூன்று பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இம்மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img