இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

srilanka dead - 2026

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்த நாள் என்று கொண்டாடப் படும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் இலங்கையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது, சர்ச்சுகள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

இந்த தொடர் குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலன் அளிக்காமலும், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டும் பலர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் இன்றும் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.