நேற்றுவரை வாளெடுத்துக் கொன்ற பயங்கரவாதம்… இன்று வெடிகுண்டுகளுடன் வெறிகொண்டு அலைகிறது!

Published:

srilanka churcharmy - 2026

இலங்கையில் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், தமிழ் மொழியின் வடிவில் தமிழர்களாய் அடையாளம் காணப்பட்ட இஸ்லாமியர்கள், சிங்களவர்களின் தூண்டுதலாலும், இலங்கை அரசின் கைப்பாவை ஆகி காட்டிக் கொடுக்கும் துரோகச் செயல்களில் ஈடுபட்டனர் என்றதாலும்,  விடுதலைப் புலிகளால் இனம் காணப்பட்டு, அங்கிருந்து துரத்தப் பட்டனர்.

விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப் பட்ட பின்னர், இலங்கையில் இஸ்லாம் என்பது பயங்கரவாதத் தன்மையுடன் துளிர்த்தது. மீண்டும் தங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து, அங்கிருந்த தமிழர்களை விரட்டும் முயற்சியில் கிராமம் கிராமமாக முஸ்லிம்கள் முயன்றனர். தொடர்ந்து, வாளெடுத்து பல தமிழர்களைக் கொன்று குவித்ததுடன், இந்துக்களின் கோயில்கள், காணிகள், விவசாய இடங்கள் என ஆக்கிரமித்து பல கிராமங்களை கபளீகரம் செய்தனர்… என்று குற்றம் சாட்டுகிறார்கள் இலங்கை வாழ் தமிழர்கள்.

இந்நிலையில், இத்தகைய குண்டுவெடிப்புகளால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து லங்காஸ்ரீ இணைய ஊடகத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் எண்ண ஓட்டமும் நிகழ்வுகளும் அலசப் பட்டது. அதில்…

இஸ்லாமியர்கள் மீதான் அழுத்தம் அதிகரிக்கும்; அதிகரிக்க வேண்டும்! இந்திய உளவு அமைப்பு ரா, அமெரிக்க உளவு அமைப்பு சிஐஏ இவற்றுடன் இலங்கை இணைந்து இயங்க வேண்டும்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இந்தியா, அமெரிக்கா இவற்றில் இருந்து தப்பி வந்து அல்லது அங்கிருந்து இங்கு வந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத தொடர்புள்ளவர்கள், தேடப்படும் நபர்கள் குறித்து அவர்களின் உளவு அமைப்புகள்தான் சரியாக அறிந்திருக்கும். அவர்கள் இலங்கையில் இருந்து இயங்குவதற்கு தடை செய்யும் விதமாக இலங்கை அரசு இவர்களுடன் இணைந்து செயல்பட வசதியாக, தனித்து ஓர் அமைப்பு உருவாக்கப் படவேண்டும்… என்ற கருத்துகள் முன்வைக்கப் பட்டன.  அந்த உரையாடல்…. 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img