தமிழிசையால் நெகிழ்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

tamilisai - 2026

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி, காயல்பட்டினம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் பாஜக., வேட்பாளரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மகாராஜன் என்று சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாக அவரது பெற்றோர் பாஜக வேட்பாளர் டாக்டர்.தமிழிசையிடம் முறையிட்டுள்ளனர்.

உடனே அவர் அந்தச் சிறுவனை நாகர்கோவில் அருகிலுள்ள குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து கட்டணமில்லா, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுவனை டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன்  இன்று நேரில் சந்தித்து, சிறுவனின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறியுள்ளார். அவரது நடவடிக்கையைப் பார்த்து அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.