வைகாசி விசாகம்… தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 18ம் தேதி விடுமுறை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

thiruchendur 7thday2 - 2026

அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கே நடைபெறும் விழாக்களில் முக்கியமான திருவிழா வைகாசி விசாகம்.

முருகப் பெருமானின் அவதார தினமாகக் கொண்டாடப் படும் வைகாசி விசாகத்துக்கு திருச்செந்தூரில் பக்தர்கள் ஏராளமானோர் குவிவது வழக்கம். மேலும், திருச்செந்தூருக்கு அடுத்து உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் செய்த நன்னாள் என்று வைகாசி விசாகம் கொண்டாடப் படுகிறது.

இத்தகைய விழாக்கள் நிறைந்த வைகாசி விசாகத்துக்கு வரும் மக்களின் வசதிக்காக, ஒருநாள் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் ஆட்சியர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.