கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருப்பவர் திமுக., பொருளாளர் துரை.முருகன்.
குறைந்தது 70 வயது வரை ஸ்டாலினுக்கு முதல்வர் கனவைக் காட்டியே இத்தனை நாட்கள் இழுத்துவந்துவிட்ட திமுக.,வினர், தற்போது 95 வயது வரை குடியரசுத் தலைவர் கனவைக் காட்டி நாட்களைக் கடத்திக் கொண்டு போக திட்டம் தீட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
இது குறித்து பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள கருத்து…
நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?
நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?
— Chowkidar H Raja (@HRajaBJP) May 7, 2019
- இதற்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
பிரதிபா பாட்டில் லெவல் தான் ஸ்டாலின் என்று துரைமுருகன் நக்கலடிக்கிறார்
ஸ்டாலின் முதல்வர் ஆகுறதுக்கு வாய்ப்பில்லைன்னு துரைமுருகன் மறைமுகமா சொல்றாரு….
தங்க கணேஷ் @ThangaGanesh66 இதுக்கு பெயர் தான் வஞ்சகப் புகழ்ச்சி… அதாவது ஓருத்தர பாராட்டுற மாதிரி கேவலமா கழுவி ஊத்துறது… @mkstalin கேட்டுச்சா…




