70 வயதில்கூட முதல்வர் ஆக முடியல… 95 வயதிலாவது குடியரசுத் தலைவர் ஆக முடியாதா?!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை

president stalin - 2026

தற்போது 70 வயது நெருங்கும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியவில்லை; குறைந்தது 95 வயதிலாவது குடியரசுத் தலைவர் ஆகிட முடியாதா என்ற நப்பாசையை இப்போது கிளப்பி விட்டிருக்கிறார் துரை.முருகன்.

சொல்லப் போனால், முதல்வர் கனவை விதைத்து, இப்போது குடியரசுத் தலைவர் எனும் கனவை ஸ்டாலினுக்குள் விதைத்திருக்கிறார் துரை முருகன்.

ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாமல் போனதற்கு முதல் காரணம், மு.கருணாநிதி. தனக்கு மிஞ்சித்தான் தானம் என்பது பழமொழி. அதுபோல், என்னதான் தனக்குப் பின் தன் மகன் வர வேண்டும் என்று நினைத்து மு.கருணாநிதி அரசியல் காய்களை நகர்த்தியிருந்தாலும், தான் இருக்கும் போது தன் மகன் வரட்டும் என்று எண்ணியதில்லை! அதனால்தான் தள்ளாமையிலும் இயலாமையிலும் இருந்தும் கூட, துணை முதல்வர் பதவியை அளித்தார் தன் மகன் ஸ்டாலினுக்கு!

தான் செயல்படாத தலைவராக இருக்கும் போது, ஸ்டாலினுக்கு பதவி தர வேண்டும் என்பதற்காக, செயல் தலைவர் என்று ஒரு பதவியை உருவாக்கிக் கொடுத்தார்.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

கடந்த 2016 தேர்தலில் கூட, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், தானே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார். தனக்குப் பின் இயற்கையாக ஏதாவது நடந்தால்தான், ஸ்டாலினுக்கே வாய்ப்பு என்று கூறி, ஸ்டாலினின் 70 வயது நெருங்கும் காலம் வரை அவரை முதல்வர் பதவிக்கு அண்ட விடாமல் தள்ளியே வைத்திருந்தார் ஸ்டாலின்!

இதை எல்லாம் மனதில் கொண்டுதான், துரை முருகன் இப்போது நக்கல் அடித்திருக்கிறார். ஆனால் அதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதி யாரும் தமிழகத்தில் இல்லை! இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகும் தகுதி உள்ளவர் ஸ்டாலின் என துரைமுருகன் பேசியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் கிடையாது; அவரைப்போல் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள் எவருமில்லை! பொதுமேடையில் காரண காரியங்களை அடுக்கி வைத்து பேசுவதில் தைரியமாக கருத்துக்களைச் சொல்வதில் சட்டப்பேரவையில் அமைச்சர்களைத் தோலுரித்துக் காட்டுவதே நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் ஊழல் பட்டியல் போட்டு பேசுவதில் ஸ்டாலினுக்கு நிகர ஸ்டாலின்தான்!

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின் என்று பேசினார் துரைமுருகன்

துரைமுருகனுடைய பேச்சு இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது!

தற்போது 70 வயது ஆகும் ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் 95 வயது கடந்துவிடுவார்! அப்போது குடியரசுத் தலைவர் ஆவது எப்படி சாத்தியமாகும் என்று  கேலி செய்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.