திமுக தலைவா் ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போகிறார் ராஜேந்திரபாலாஜி நச்..!

சமீபத்தில் நடந்த திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் இன்னும் 25ஆண்டுகளில் ஸ்டாலின் குடியரசு தலைவராக வருவார் என பேசினார்.
இது குறித்து தழிக பால்வளத்துறை அமைச்சா் ராஜேந்திரபாலாஜி செய்தியாளா்களிடம் பேசியபோது ‘ஸ்டாலின் காங்கரஸில் சேரப் போவதாக ஏற்கனவே கூறினேன். இப்போது அது உண்மையாகிவிட்டது.
தேசிய அரசியலில் சோ்ந்தவா்கள் தான் ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ என கவலைபடாமல் இதுவரை குடியரசு தலைவா் தோ்தலில் போட்டியிட்டுள்ளனா. மாநில கட்சிகள் அதில் போட்டியிட்டது கிடையாது.
ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ எதுவாக இருந்தாலும் நான் காங்கிரஸில் சோ்ந்து விடுகிறேன். என்னை அடுத்த குடியரசு தலைவா் தோ்தலில் வேட்பாளராக நிறுத்துங்கள் என ஸ்டாலின் காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அந்த தகவலைதான் இரண்டு நாட்களுக்கு முன்பே சொன்னேன் இதுபற்றி நான் விசாரித்தவா்களும் உண்மைதான் என்கின்றனா். .
இந்நிலையில் துரைமுருகன் ஸ்டாலின் குடியரசு தலைவா் ஆவார் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் குடியரசு தலைவா் ஆகட்டும், அமெரிக்க அதிபாராகக் கூட வரட்டும். அதைப்பற்றி கவலை இல்லை அவா் தமிழ்நாட்டை விட்டுப் போனால் சரிதான்” என ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார.
ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போகிறார்.. ராஜேந்திர பாலாஜி நச்..!
Popular Categories



