
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்று இறுதிப் வேட்பாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரமேஷுக்கு இடம் ஒதுக்கி ஏற்கனவே அறிவிப்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அந்தப் பட்டியலை மாற்றி வடிவமைத்துள்ளனர்.அதன்படி ஒன்பதாவது இடத்தில் அவருக்கு இடம் ஒதுக்கி பட்டியல் தயார் செய்துள்ளனர்.
நான்காவது இடத்தில் இருந்த தனது வேட்பாளர் வரிசை எண்ணை 9-வது இடத்துக்கு மாற்றியதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் எனவும், தான் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகின்ற அந்த வாய்ப்பு பாதிக்கப்படுவதால் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்று தேர்தல் நடத்தும் அலுவலகமான அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்து உருண்டு பிரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



