மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிக்னல் கோளாறு காரணமாக மதுரை – செங்கோட்டை ரயிலும், செங்கோட்டை – மதுரை ரயிலும் நேற்று மாலை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்து கொண்டிருந்தன.
இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுனருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்ததன் பெயரில், இரு ரயில்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டன. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து உடனடியாக சிக்னல் சரிசெய்யப்பட்டது. இதன் காரணமாக இரு ரயில்களும் தாமதமாக சென்றன.



