நெல்லை மாவட்டத்தில்… நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த யானை!

Published:

elephant died - 2026

நெல்லை மாவட்ட வனப் பகுதிகளில் அண்மைக் காலமாக கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இன்றி வன விலங்குகளும் தவித்து வருகின்றன.

இந்நிலையில், உடலில் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி, புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இறந்து விட்டது.

இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், அந்த யானையின் உடலைப் பார்வையிட்டு பரிசோதித்தனர்.

Related articles

Recent articles

spot_img