திருச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். நான் தவறு செய்தால் நேரடியாக மன்னிப்பு கேட்பேனே தவிர என்னுடைய அட்மின் செய்தார் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். நடிகர்கள் ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
தற்போது விஷால் தலைமையிலான நடிகர் சங்கம் காலாவதியாகி விட்டது. அவர்கள் கூட்டும் எந்த கூட்டமும் செல்லுபடியாகாது. ஆக்கிரமிப்பில் உள்ள நடிகர் சங்க இடத்தை அதற்கு உரியவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
விரைவில் ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, எஸ்.வி.சேகர் தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார் விஷால். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று கூறினார்.



