ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக, அமமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசியபோது:
தேர்தல் சமயத்துல மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சி ஆயிடும். ஸ்டாலின் கிராமத்துக்கு போய் சபை நடத்துவார்.
அப்புறம் ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்! தேர்தல் சமயத்தில் பொள்ளாச்சி பிரச்னை குறித்துபேசி, பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்.
பெண்கள்மீது அக்கறை வந்துவிடுகிறது. ஸ்டாலின், டீக்கடைக்கு போய் டீ குடிப்பார். நல்லா டிராமா போடறார்.
இதெல்லாம் 23-ம் தேதி வரைக்கும்தான்! மக்களோட சொத்தை சுருட்டிக்கிட்டு, கப்பல் வாங்கி விட்டு ஓட்டிட்டு இருக்கிறார் டிஆர் பாலு!
சக்திமானை நம்பி மாடியில் இருந்து குதிப்பது என்பதும், ராகுல் காந்தி பிரதமராக இருந்து இந்தியாவை காப்பார் என்று நினைப்பதும் ஒன்னுதான்.
ஊழல் குறித்து பேச அதிமுகவுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் சொல்றார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுகதானே? நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்ததே திமுகதான்” என்றார்.



