கரூர் அருகே கோர விபத்து: மினி லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு!

Published:

karur accident - 2026

கரூர்: கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குல தெய்வம் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப் படுகிறது. அப்போது,  எதிரே வந்த வேனும் இவர்கள் பயணம் செய்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில்,  6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் கீழ மாயனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை தனது காரில் மனைவி மகன் பேரக் குழந்தையுடன் 8 பேராக, குலதெய்வம் கோவிலுக்கு திருச்சியை நோக்கிச் சென்றனர். அப்போது மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகில் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேன், இவர்கள் பயணம் செய்த காருடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 6 மாத ஆண் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் கரூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!


Update:

கரூர் மாவட்டம் மேலமாயனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது (70) , கிஷோர் (12), நவீன்(23), ஜோஸ்வந்த்(1), சுஷாந்த் கிருஷ்ணா(1 மாத குழந்தை), அருணா மற்றும் உள்பட ஏழு நபர்கள் ஒரு காரில் இன்று காலை முசிறி புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் முசிறி திருச்செங்கோட்டில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சிவா அருணா தம்பதியினரை ஒரு வயது குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சென்று கொண்டிருந்தனர்
அவர்கள் சென்ற கார் மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது ஒரு பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி அட்டைப்பெட்டி ஏற்றிக்கொண்டு ஒரு லோடு வேன் வந்து கொண்டிருந்தது. லோடு வேன் ஐ மேல வெளியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார்.karur accident2 - 2026

அப்போது, பஸ்சை முந்திச் செல்ல முயன்ற கார், எதிர்பாராதவிதமாக லோடு வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி மற்றும் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருணா மற்றும் அருணாவின் ஒரு மாத குழந்தை சுஷாந்த் கிருஷ்னா, ஜோஸ்கிருஷ்னா ஆகிய நான்கு பேர் மொத்தம் ஆறு நபர்கள் கரூர் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒரு காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

காரை ஓட்டி வந்த சிவக்குமார் வயது 35 கோமதி வயது 24 இருவரும் கரூர் அமராவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img