அம்பேத்கர் பிறந்த நாள்: இந்து முன்னணி மரியாதை

ambedkar-hindumunnani சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை இந்துமுன்னணியினர் மரியாதை செலுத்தி கொண்டாடினர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டமேதை, தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியமேட்டில் உள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் க. பக்தவத்சலம் மற்றும் மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் முகுந்தன், சிவ. விஜயன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி பொறுப்பாளர்களால் அண்ணல் அம்பேத்கரின் உன்னத சேவை நினைவுகூரப்பட்டது.