நெல்லையில் `எலைட்’ திறப்பு குடிமகன்கள் உற்சாகம்…!

உள்ளூர் செய்திகள் நெல்லை

alit 2 - 2026

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சார்பில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சராசரியான மது வகைகள் மட்டுமே விற்பனை செய்ப்பட்டு வருகிறது. ஆனால் மதுபிரியா்களின் தேவைகளை இந்த கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தீர்த்தபாடில்லை

இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தயார் செய்யப்படும் உயர் ரக மது ரகங்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக ‘எலைட்’ என்ற பெயரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட தலைநகரங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே நெல்லையிலும் தங்களுக்கு உயர் ரக மதுபானங்கள் கிடைத்திட வேண்டுமென மது பிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

குடிமகன்களின் நீண்ட நாள் ஆசை மற்றும் கனவுகளை தமிழக அரசு தீா்த்து வைத்துள்ளது. அதன்படி

நெல்லை பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பஸ் நிறுத்தம் அருகே வாய்க்காலையொட்டி உள்ள தெருவில் ‘எலைட்’ மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

இதை அறிந்த மதுப்பிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் தற்போது இந்த கடைக்கு படையெடுத்து வந்து உயர்ரக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

இங்கு 750 மில்லி லிட்டர், 1 லிட்டர் என்ற அளவில் பாட்டிலாக மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தற்போது ரூ.800 முதல் ரூ.3,500 வரையிலான மதுபாட்டில்கள் கிடைக்கிறது.

விரைவில் மேலும் அதிக விலையிலான மதுவகைகள் வர இருக்கின்றன. இதுதவிர ரூ.120 முதல் ரூ.400 வரையிலான பீர் பாட்டில்கள் இங்கு குளிரூட்டப்பட்ட நிலையில் கிடைக்கிறது.

இதை அறிந்த மதுப்பிரியர்கள் தற்போது இந்த கடைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.