திமுக உபி.,க்களின் மன உளைச்சல்: அந்த ஒத்த எழுத்துலதான் உசிரு போவுது…!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

dmk nalvar - 2026

திமுக., உடன்பிறப்புக்களின் மன உளைச்சல் இப்போதைக்கு இதுதான் என்று கூறி ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக., எப்படி எதிராளிகளைப் பந்தாடியது… இப்போது எப்படி மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறது என்று கூறி இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளனர்.

அதில்…

“எட்டு எழுத்து ஆசாமி – பக்தவத்சலம் – இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நம்மை ஜெயில்ல வச்சு சுளுக்கு எடுத்தாரு”

“ஏழு எழுத்துப் பொம்பளை – இந்திரா காந்தி – எமர்ஜென்சியின் போது ஜெயில்ல வச்சி நொங்கெடுத்து, சிலருக்கு மூஞ்சி, வாய் எல்லாம் கோணலாச்சு!”

“அப்புறம் 6 எழுத்து – ராஜீவ் காந்தி – நம்மளை வாழ்ந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்! பிரதமர் சந்திரசேகரைத் தூண்டிவிட்டு நம்ம ஆட்சியைக் கலைச்சான்! குண்டு வெடிப்பில் செத்து ‘ஜெயின் கமிஷன்’ அறிக்கையில் பேயா மாறி பயமுறுத்தினான்!”

” ஐந்து எழுத்து பொம்பளை – ஜெயலலிதா – நம்மை பெண்டு எடுத்துச்சு! அந்த 5 எழுத்துப் பொம்பளையோட அது சாவற வரைக்கும் மல்லுக் கட்டினோம்!”

“நாலு எழுத்து காமராஜ் – அவரோட பல வருசம் மல்லுக்கட்டினோம். அந்த மனுசன் ஊர் ஊரா மேடை போட்டு நம்மைக் காறித் துப்பினாரு”

“அப்புறம் 3 எழுத்து MGR – அந்த மனுசன் காலமாற வரைக்கும் நம்மளை எந்திரிக்கவே விடலை”

“இப்ப இரண்டெழுத்து மனுசன் – மோடி – நம்மை அரசியல் ரீதியாக சிதைச்சு சின்னாபின்னமாக்கிடுவான் போல இருக்குது”

“இதெல்லாம் கூடப் பரவாயில்லை… அந்த ஒரு எழுத்து மனுசன் – ‘ஷா’ வை நினைச்சாதான் வெல வெலங்குது!” – என்று குறிப்பிடப் பட்டுள்ளது. !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.