திருப்பதி பிரசாதம், சால்வையுடன் பிரதமரைச் சந்தித்த ஜகன்மோகன் ரெட்டி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

narendramodi jaganmohanreddy - 2026ஆந்திர மாநிலத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி கண்டுள்ளார் ஜகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர்.

இதை அடுத்து, அவரை இல்லத்தில் சென்று சந்தித்து, திருப்பதி பெருமாளின் பிரசாதம், லட்டு, சால்வைகளை வழங்கினர் திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகம்.

இது போல், பிரதமராக மீண்டும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வென்றுள்ள நரேந்திர மோதியை கோயில் பிரசாதம் சால்வையுடன் சென்று சந்தித்தார் ஜகன் மோகன் ரெட்டி. இன்னும் இரு தினங்களில் ஆந்திர முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள ஜகன்மோகன் ரெட்டி பிரதமர் மோதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோதி உறுதி அளித்துள்ளார்.narendramodi jaganmohanreddy2 - 2026

இது குறித்து மோதி தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…:

ஆந்திராவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஜெகனுடன் ஒரு அற்புதமான சந்திப்பு! ஆந்திராவின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆந்திராவின் வளர்ச்சி குறித்தும் அவருடன் விவாதித்தேன். நான் அவர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அனைத்து விதத்திலும் உதவ உறுதியளித்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.