குரங்கணி தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமானை கைது செய்யுங்கள்: அர்ஜுன் சம்பத்

Published:

forestfire1 - 2026

தேனி மாவட்டம் குரங்கணி  தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமான் உள்ளிட்டோர் மீது உரிய வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

தேனி மாவட்டம் – குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து – மத்திய மாநில அரசுகள் மீது பழி சுமத்தியும் நியூட்ரினோ திட்டம் குறித்து அவதூறு பரப்பியும் – தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தையும், பதட்டத்தையும் உருவாக்க முயலும் நக்சல் ஆதரவாளர் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

தேனி மாவட்டம் – குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தின் காரணமாக 14 பேர் வரை பலியாகி உள்ளனர், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம்பட்டு மருத்துவமணையில் உள்ளனர். சிலர் உயிர் தப்பி உள்ளனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

தனியார் மலையேற்றப் பயிற்சி கிளப் மூலம் வனப்பகுதிக்கு சென்று திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்களை மீட்க உள்ளூர் மக்களும், மத்திய மாநில அரசுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டன.

உள்ளூர் மக்கள் குறிப்பாக RSS மற்றும் இந்து இயக்கங்களின் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு மற்றும் முதலுதவி பணிகளில் ஈடுபட்டு துணிச்சலுடன் வனப்பகுதியில் நுழைந்து காயம்பட்டவர்களை மீட்டு தங்கள் தோளில் சுமந்து வந்து காப்பாற்றியுள்ளனர்.

தீ விபத்து காரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. காயம்பட்டோருக்கும், உயிரிழந்தோருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இந்நிலையில் தீ விபத்து செய்தி வந்தவுடனேயே நக்சல் ஆதரவாளர்களும், நியூட்ரினோ திட்ட எதிர்ப்பாளர்களூம் மத்திய, மாநில அரசுகளுக்கு விரோதமாக அவதூறு கருத்துக்களை பரப்ப துவங்கி விட்டனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதற்கு மத்திய அரசும், நியூட்ரினோ திட்ட அமைப்பாளர்களுமே காரணம் என்றும் வேண்டுமென்றே மத்திய அரசால் தீ வைக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் பேசினார்.

மே.17, கூடங்குளம் போராட்ட காரர்கள் உள்ளிட்டோரின் சமூக வலைத்தளங்களில் தீ விபத்திற்கு மத்திய அரசே காரணம் என செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பி வரும் இவர்களின் கருத்துக்களால் தமிழக மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான பாதையில் வழி நடத்து கின்றனர். மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவம் குறித்தும், மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என அவதூறு பரப்புகின்றனர்.

ஏற்கனவே நக்சல் மற்றும் கஞ்சா கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் உள்ள பகுதி இந்த வனப்பகுதியாகும் இப்பகுதியில் அரசிற்கெதிராகவும், ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தீய எண்ணங்களை உருவாக்கும் இயக்கங்கள் மீதும் தீவிபத்து குறித்து அவதூறு பரப்பு சீமான் உள்ளிட்டோர் மீது உரிய வழக்குபதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

– என்று கேட்டுக்கொண்டுள்ளார்
அர்ஜுன் சம்பத்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img