அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க் கட்சிகள் கொண்டு வரும் போது, வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி கூறியிருந்தார். தன்னிச்சையாக செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நீக்கியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி,
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது …
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.சி. பழனிசாமி எந்த இடத்தில் அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளை மீறினேன் என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.