மதுரை பகுதி கோயில்களில் குரு பெயர்ச்சி விழா: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்பு!

Published:

homam-in-melamadai-sowbagya-vinayakar-temple
homam-in-melamadai-sowbagya-vinayakar-temple

மதுரை: குரு பெயர்ச்சி நாளான இன்று மாலை 6 மணிக்கு மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மஹாயாகமும், பரிகார அர்ச்சனைகளும் & கந்தசஷ்டி விழா முதல்நாள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

மதுரை நகரில் பல்வேறு கோயில்களில் குருப்பெயர்ச்சியை யொட்டி, மகாயாகம் நடைபெற்றது.

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில்
குருப்பெயர்ச்சி மகாயாகமும், பரிகார அர்ச்சணைகளும் நடைபெற்றது. ஆலய நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜெகதீசன், வள்ளிமுத்து ஸ்தபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மதிச்சியம் ஆவின் பாலகம் அருகே உள்ள பாலவிநாயகர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி மகா யாகத்தை , ஈஸ்வர பட்டர் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல், மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மஹா யாகமும், குரு ஃப்ரீதி ஹோமங்களும், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகி ஆர். சேகர், ஆர். ரவி மற்றும் மகளீர் குழுவினர் கலந்து கொண்டனர். மதுரை வைகை காலனி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வைகை விநாயகர் ஆலயத்தில்
குருப்பெயர்ச்சி மகாயாகமும், பரிகார அர்ச்சணைகளும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Related articles

Recent articles

spot_img