ஐசிஎஃப்., வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே! ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை நன்றி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

06 Auguest 01 Tamilisai - 2026

ரயில்வே வேலை வாய்ப்பு சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! ஐசிஎஃப் வேலைவாய்ப்பில் தமிழர்க்கே முன்னுரிமை என்று அமைச்சகம் கூறியதற்கு தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள இரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு சேர்ப்பதாக புகார்கள் எழுந்தது.

புகார் குறித்து பரிசீலித்த இரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் “சென்னை ICF-ல் பழகுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைக்கு வரவேற்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவீட்டரில் இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்… மரியாதைக்குரிய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களிடம் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே அமைச்சர் திரு. அவர்களுக்கு நன்றி… – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.