ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!

Published:

29 May16 ICF - 2026

ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய சமீபகாலமாக வட மாநிலத்தவர் அதிகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்! இதை அடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது!

இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை ஐசிஎப்பில் அப்ரண்டீஸ் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20ஆம் தேதி வெளியானது! இந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் 510 அப்ரண்டீஸ் பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும் அதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது! இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img