சென்னை:
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய விதித்துள்ள தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய, பத்திரப் பதிவுத் துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வீட்டுமனைகளை வகைப்படுத்த, தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, அங்கீகரிக்கப்பட்டாத மனைகளை பத்திரவுப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்தும், தமிழக அரசுக்கு பிப்., 27 ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.



