எஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

SRM university - 2026

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே பொத்தேரியில் உள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம். இங்கே கல்லூரி விடுதி கட்டடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியைச் சேர்ந்த அனுப்பிரியா என்று தெரியவந்துள்ளது. இந்த மாணவி 3ஆம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார்.

கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி அனுப்ரியா, திடீரென விடுதிக் கட்டடத்தின் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அடுத்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கு விரைந்த மறைமலை நகர் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மறைமலை நகர் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.