தாய் அனுபவித்த பாலியல் டார்ச்சர்! கூலிப்படை வைத்து தந்தையைக் கொன்ற மகன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder-2-1
murder-2-1

உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை அவரது மகனே கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவான்(45). இவருக்கு சொந்தமாக வயல் உண்டு. அங்கு கரும்பு பயிர் செய்துள்ளார். இரவு நேரங்களில் வரும் பிராணிகளை விரட்டுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. வயலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மகனிடம் இருந்து முன்னுக்கு பின்னான தகவல்கள வந்துள்ளது. இதனால் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பவான் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி அவரை வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கு கூலிப்படைகளை ஏவி கொலை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.