குறுக்கே போனவர் மீது மோதாமல் இருக்க … வேனை திருப்பியதில்…!

Published:

darmapuri accident - 2026கரூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க சுற்றுலா வேனை திருப்ப முயன்ற போது எதிர்பாராத விதமாகசாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயம் காயம்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 26 பேர் சுற்றுலாவேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கன்னிக்கு சென்றுள்ளனர்.

கரூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரை அடுத்த கோவிந்தம்பாளையம் அருகில் சைக்கிளில் முதியவர் ஒருவர் திடீரென சாலையைகடக்க முயன்றுள்ளார்.

darmapuri accident2 - 2026
அப்போது அந்த வழியாகவந்த சுற்றுலா வேன் அவர் மீதுமோதாமல் இருக்கதிருப்பியுள்ளார் ஓட்டுநர். ஆனால் சுற்றுலாவேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 26 பேர், வேன் ஓட்டுநர் மற்றும் சைக்கிள் ஓட்டிவந்தவர் என 26 பேர் காயமடைந்தனர்.

இதனைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்ததுடன் காயம்பட்டவர்கள் மீட்டுஅரசுமற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

மேலும், இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல் நிலையபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img