கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி: முன்னேற்பாடுகள் தீவிரம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்

briant park kodaikanal - 2026

கொடைக்கானலில் வரும் மே 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 58 வது மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களால் ஆன மயில் மற்றும் நார்னியா குதிரை போன்ற உருவங்கள் வடிவமைக்கும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி 58 வது மலர்க்கண்காட்சி அதனைத் தொடர்ந்து கோடை விழா நடைபெற உள்ளது ..

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.. அதனைத் தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது ..

மேலும் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மலர்க் கண்காட்சிக்கு பயணிகளை கவருவதற்காக லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களால் ஆன மயில் மற்றும் நார்னியா குதிரை போன்ற பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது .. இவை இந்த மலர்கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.