புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்து காமாட்சி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினத்தில் உள்ள முத்து காமாட்சி அம்மன் கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் .
இங்கு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
விழாவினையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் முத்து பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.