பதற வைக்கும் பயங்கரம்… பிரியங்கா உடல் கிடந்த இடத்துக்கு அருகில்… எரிந்த நிலையில் மேலும் ஒரு பெண் உடல்!

Published:

lady burnt alive hyderabad - 2026

சம்ஷாபாதில் மற்றும் ஒரு பெண் மீது பாலியல் வன்முறை, கொலை, உடல் எரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப் பட்டது. ஆனால் அது தற்கொலை என்று போலீஸார் தற்போது கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் பரபரப்பாக மாறிய பிரியங்கா ரெட்டி கொலையை ஜீரணிக்க முடியாமல் அனைவரும் வருந்திவரும் நிலையில் 24 மணி நேரத்திற்குள் சம்ஷாபாதில் அதே போன்று இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். சம்ஷாபாத் சித்துலகுட்டா சாலையில் ‘பங்காரு மைசம்மா’ ஆலயத்தின் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகக் கொடூரமாக பெண்ணைக் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உள்ளது. பெண்ணை கொன்று பின் எரித்து இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

பிரியாங்கா கொலை நடந்து 24 மணி நேரம் கடக்கும் முன்பே அதே பிரதேசத்தில் இன்னொரு பெண் கொலைக்கு ஆளாகி இருப்பது பரபரப்பாக மாறியுள்ளது. தினமும் பூஜை நடக்கும் பங்காரு மைசம்மா ஆலயம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். சுற்றுப்புறங்களை எல்லாம் பரிசீலித்தனர். கோவில் உள்ள பிரதேசத்தில் சாலை அருகிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது. சுவர் அருகில் பெண்ணை கொன்றுள்ள தடயங்கள் தெரிகின்றன… என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்ஷாபாத் சித்துலகுட்டா அருகில் பங்கரு மைசம்மா ஆலயத்தின் அருகில் எரிந்த நிலையில் கிடந்த பெண் வழக்கில் முக்கிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன . அந்தப் பெண் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்தனர் . இறந்த பெண் புரானாபூல் என்ற இடத்தில் உள்ள பாபாபோலாதாஸ் நகர் தூள்பேட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிங்கின் மனைவி கவிதா பாய் (35). என்று போலீசார் அடையாளம் கண்டனர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அவர் மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக சம்ஷாபாத் டிஜிபி பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img