இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பு!: கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

Published:

nia office - 2026

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகப் படுபவர்கள் வீடுகளில் கோவையில், அன்புநகர், உக்கடம், குனியமுத்துார் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உக்கடத்தில் அசாரூதீன், போத்தனுாரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் காரணம் என்று கண்டறியப் பட்டது. இந்நிலையில், இதற்குக் காரணமானவர்களுடன், சமூக வலைதளத்தில் தொடர்பு வைத்திருந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து, கோவையில் தொடர் சோதனைகள் நடத்தப் பட்டன. இந்த சோதனையில் தகவல்கள் அடங்கிய பென்டிரைவ் உள்ளிட்ட சில பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்திய, தடை செய்ய அமைப்பினருடனும், எத்தனை நாட்கள் இவர்கள் தொடர்பு வைத்திருந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img