தன்னம்பிக்கையில் வெற்றி பெற்ற தையல்நாயகி திருநங்கை……!

thaiyal nayagi - 2026

நம்மில் பலருக்கு திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்யும் பேராகவும், கடை, கடையாக ஏறி பிச்சை எடுப்பதும், இரயில், பஸ் பயணிகளில் பொதுமக்களிடம் அநாகரியமாக நடக்கும் திருநங்கைள்தான் ஞாபகம் வரும்.

ஆனால் அவா்களின் வாழ்வில் உள்ள கசப்பான நிகழ்வுகள் நம்மில் பலருக்கும் தெரிவதேயில்லை

ஆனால் தற்போது அவா்களில் பலா் தங்களது தனிதிறமைகளால் வாழ்வில் வெற்றி படிகளில் ஏறி வருவது ஆறுதலான விஷயம்.

அப்படி ஓரு ஆச்சரியபடுத்தும் திருநங்கையின் சாதனைகள் குறித்த பதிவுதான் இது.

பட்டுக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வரும் திருநங்கை. தையல்நாயகி இவருடைய வாழ்வில் இவர் சந்தித்த கசப்பான சம்பவங்களைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமம்தான் என் பூர்வீகம். நான், அம்மா, அப்பா, அக்கான்னு கலகலப்பான குடும்பம் எங்களுடையது.

எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். ஸ்கூல்ல பொம்பளை புள்ளைங்க கூடவேதான் இருப்பேன். அதனால வாத்தியார், பசங்கன்னு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. வீட்டிலும் நிறைய அடி வாங்கியிருக்கேன். ஆனாலும், எனக்குள்ள இருந்த பெண் தன்மையை என்னால மறைக்க முடியலை. ஒருகட்டத்துக்கு மேல வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.

THERUNANGI 3 - 2026

திருநங்கைன்னா பொண்ணாவே மாறிடுவாங்கங்குறதெல்லாம் எனக்குத் தெரியாது.

டவுசர் போட்டுட்டு ஒரு கடையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போ ஒரு நாள் எங்க கடைக்கு ஒரு அம்மா வந்தாங்க.

அவங்க பார்க்க ஆம்பளை மாதிரி தெரிஞ்சாலும் பெண் உடையில் இருந்தாங்க.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

அப்போ எங்க கடையில் வேலை பார்க்கிறவங்க இவங்க உன்னை மாதிரின்னு சொன்னாங்க. அப்போதான் திருநங்கையாக நாம மாறிட்டால் நடை, உடை, பாவனைன்னு எல்லாமே மாத்திக்கணும்னு புரிஞ்சுகிட்டேன்.

அவங்ககிட்ட போய் நானும் உங்களை மாதிரிதான்னு சொல்ல எனக்கு பயம். தூரமா இருந்து அவங்களைப் பார்த்துட்டே இருக்க ஆரம்பிச்சேன்.

இதெல்லாம் அவங்க தெரிஞ்சுகிட்டு என்னைக் கூப்பிட்டு வீட்டுக்கு போகச் சொல்லி அட்வைஸ் பண்ணாங்க. இது ரொம்ப கஷ்டமான வாழ்க்கை கண்ணு.. இது உனக்கு வேண்டாம்னு சொன்னாங்க. இல்ல.. எந்த கஷ்டம்னாலும் ஏத்துக்கிறேன்.. எனக்கு பிடிச்ச வாழ்க்கையைக் கொஞ்ச நாளாவது வாழணும்னு ஆசைப்படுறேன்னு சொன்னேன்.Therunagai 6 - 2026

திருநங்கைனாலே இப்படித்தான்னு ஊர் மக்கள் சொல்ற அளவுக்கு நடந்துக்கக் கூடாது. ரொம்பவே கெளரவமா வாழ்ந்து காட்டணும்னு சொன்னாங்க. அப்போதிலிருந்தே கடை ஏறுதல், பாலியல் தொழில்னு எந்தத் தொழிலும் செய்ய மாட்டேன். ஒரு கடையில் சமையல் வேலை பார்த்துட்டு இருந்தேன்.

எங்க ஊர்க்காரங்க மூலமா நான் இருக்கிற இடத்தை எங்க வீட்டுல கண்டுபிடிச்சிட்டாங்க. உன்னால உன் அக்காவுடைய வாழ்க்கை பாதிக்கப்படணும்னு விரும்புறீயான்னு அழுதாங்க. என்னால அவங்க ஏன் கஷ்டப்படணும்னு அவங்க கூட மறுபடி வீட்டுக்குப் போனேன்.

என்னைப் பையனாகப் பார்க்கத்தான் அவங்க விரும்புனாங்க. `என் ஆண்மை என்னுடைய நிழல்.. என் பெண்மை என்னுடைய உசுரு’ன்னு என் பெற்றோர்களுக்குப் புரியலை.

என் அக்காவுக்கு திருமணமாகி அவ லைஃப்ல செட்டில் ஆகுற வரைக்கும் என் ஆசைகளுக்கு, உணர்வுகளுக்குத் தடை போட்டுட்டு இருந்தேன்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

ஒருகட்டத்துக்கு மேல எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பார்த்து கட்டி வைக்கப் போகிறதா சொன்னாங்க. ஏன் இவங்களுக்கு நான் சொல்றது புரியவே இல்லை..

இதே பெற்றோர்கள் உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம்னு சொன்னாங்கன்னா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு மனசு கெடந்து ஏங்கும்.

அக்கா லைஃப்ல செட்டிலாகிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் மறுபடியும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்.

அவங்க கண்டுபிடிக்காத அளவுக்கு எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாத கிராமத்துக்குப் போனேன்.

அங்கே கட்டட வேலை பார்த்துட்டு இருந்தேன். நல்லா உழைச்சு சம்பாதிச்சேன். மன்னார்குடி, காரைக்கால்னு பல ஊருக்குப் பிழைப்புக்காகப் போனேன்.

கடைசியா மன்னார்குடி வந்தேன். மன்னார்குடி வந்ததுக்கு அப்புறமா நான் திருநங்கையாக மாற மனசளவில் தயாரானேன்.

என்னுடைய 21 வயசுல ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து நாம உசுரோட வெளியே வருவோமான்னு தெரியாதுன்னு ஆஸ்பத்திரிக்குப் போகிறதுக்கு முன்னாடி மஞ்சள் பூசி, குங்குமம் வைச்சு இத்தனை நாள் இதுக்காகத் தானே தவிச்சிட்டு கெடந்தோம்னு பல கனவுகளோடும், ஆசைகளோடும் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.

ஆபரேஷன் முடிஞ்சு கண்ணைத் திறக்கும்போது புது மனுஷியா இந்த உலகத்துக்கு வந்த உசுராக என்னை நினைச்சேன்.

அதுக்கிடையில் டிபன் கடை நடத்த ஆரம்பிச்சேன். என் கை மணம் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க.

“என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டுப் போறாங்க..!” எனத் தனக்கே உரித்தான வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார் தையல் நாயகி.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சமைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடையில் வருகிற வருமானத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிச்சேன்.

வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். என்னை மாதிரி வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கைகளை மகளாக ஏத்துக்கிட்டேன்.

கொஞ்ச வருஷம் போனதுக்கு அப்புறமா எங்க வீட்டுக்கு போன் பண்ணி நான் திருநங்கையாக மாறினதைப் பற்றிச் சொன்னேன்.

உடனே வீட்டுக்கு வரச் சொன்னாங்க. எந்த ஊரிலிருந்து பயந்து ஓடி வந்தேனோ அதே ஊருக்குச் சேலை கட்டி, பூ வைச்சு, மஞ்சள் பூசி பொண்ணு மாதிரி போய் இறங்கினேன்.

வீட்டுல முதலில் என்னை ஏத்துக்க மறுத்தாலும் பிறகு என்னைப் புரிஞ்சிகிட்டாங்க. நான் கெளரவமா செய்யுற தொழில் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது.

என் அம்மா, அப்பா என் கூட பட்டுக்கோட்டையில்தான் இருக்காங்க. டிபன் கடையில் வருகிற பணத்தில் எங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழுறேன் என்கிறார்,

இந்தத் தன்னம்பிக்கை திருநங்கை தையல் நாயகி.

1 COMMENT

  1. தையல்களில் (பெண்களில்) நாயகி இவர் தான். தன்னம்பிக்கையும் துணிச்சலும் இவர் போன்றே பல திருநங்கைகளிடம் இருந்தால் அவர்கள் கவுரவமான வழக்கை வாழலாம். பிறரின் ஏச்சுக்கும் இழிவான பார்வைக்கும் வக்கிர எண்ணங்களுக்கும் ஆளாக வேண்டாம். இவர்களுக்கு தேவை குடும்பம் மற்றும் சமுதாயத்தின் அரவணைப்பும் பாதுகாப்பும் தான். திருநங்கை அல்லது திருநம்பியாக பிறந்தது அவர்கள் குற்றம் அல்லவே? மரபணுப்பிழை அல்லவா? மக்களின் ஆதரவு தான் தேவையே தவிர அனுதாபம் அல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories