தெரியாம பேசிட்டோம்… இனி இப்படி பேச மாட்டோம்… மன்னிச்சிருங்க! வீடியோ வெளியிட்ட நிஷா, பழனி!

Published:

nisha pazhani image - 2026

நீட் பற்றியும், தமிழிசை பற்றியும் தவறாக விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர்!

விஜய் டிவி.,யின் கலக்கப் போவது யாரு – என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நிஷா. அறந்தாங்கி நிஷா என்று அறியப் பட்ட இவரும், பழனி என்பவரும் இணைந்து செய்யும் காமெடிகள் விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன.

விஜய் டி.வி.யில் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது வெளியூர்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு காமெடி புரோக்ராம் செய்வது இவர்களின் வழக்கம். இந்நிலையில் அண்மையில் திமுக., சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, இருவரும் பாஜக., குறித்தும், மோடி, தமிழிசை ஆகியோர் குறித்தும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, நீட் தேர்வு குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எடுத்து வைத்தனர். இதனைக் கேட்டு பாஜக., மற்றும் தேசிய எண்ணம் கொண்ட இளைஞர்கள் இருவருக்கும் போன் செய்து அடித்து துவைத்தனர்.


அறந்தாங்கி நிஷாவுக்கு அறிவுரை சொல்லும் வகையில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவரின் ஆடியோ பதிவு:

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இந்நிலையில் தாங்கள் செய்தது தவறு என்றும், இதுவே அவ்வகையில் முதலும் கடைசியுமான நிகழ்ச்சி என்றும் இருவரும் மன்னிப்புகேட்டு வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவும் இப்போது சமூகத் தளத்தில் வைரலாகி வருகிறது.

aranthangi nisha - 2026முன்னதாக, தனது நிகழ்ச்சி குறித்தும், நடந்தது குறித்தும் நிஷா ஊடகங்களிடம் தனிப்பட்ட வகையில் கூறிய போது…

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் இருக்கும் பழனி அண்ணா மூலமாக, மறைந்த திமுக., தலைவர் குறித்த நிகழ்ச்சியில் பேச எனக்கு வாய்ப்பு வந்தது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இதில் கலந்துக் கிட்டோம். ஒரு பட்டிமன்றம் மாதிரியான நிகழ்வில்தான் பேசினேன்.

இந்த நிகழ்வில் பேசியதன் மூலமாக நான் ஏதோ திமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆகிவிட்டேன் என்பது போல் பலரும் நினைக்கிறாங்க… அப்படி இல்லை. நிறைய பேர் எனக்குப் போன் செய்து, ‘நிஷா மேடம் நீங்க எங்க சகோதரி மாதிரி! உங்க நிகழ்ச்சிகளை யுடியூப்பில் நாங்க பார்த்து ரசிக்கிறோம். ஆனா நீங்க இப்படி ஒரு கட்சி சார்பா பேசுவீங்கனு எதிர்பார்க்கல! ஒரு அகில இந்திய கட்சியின் தலைவி, அவரும் ஒரு பெண்மணி, அவர் குறித்து இப்படியா பேசுவீங்க?.. – என்று ரொம்ப மரியாதையாத்தான் என்னிடம் கேட்டாங்க.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

நான் திமுக மேடையில் பேசியதால் சிலர் கஷ்டப்பட்டிருக்காங்கனு நினைச்சப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. நான் யாரையும் கஷ்டப்பட்டுத்திப் பார்க்க மாட்டேன். தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சியையும் ஆதரித்து பேசியது இல்லை. பொதுவான ஒரு நபர்தான்.

என் கணவர் என்னிடம், ‘நீ பேசினது போதும் இது மாதிரியான கட்சி தொடர்பான மேடைகளுக்கு இனிமேல் போக வேண்டாம். இதுவரைக்கும் நான் எதுவும் உன்னை சொன்னதில்லை, இப்பவும் தப்பா சொல்லல. உன்னோட பெரிய பலமே காமெடிதான் அதுக்குள்ளே மட்டும் போ’னு அட்வைஸ் பண்ணினார்.

நான் பேசுன விஷயத்தால ஒரு சார்பினர் கஷ்டப்பட்டிருக்காங்கனா மன்னிப்பு கேட்குறதுல தப்பு இல்லை என்று பழனி அண்ணாவிடம் கூட சொன்னேன். என்னால யார் மனசாவது புண்பட்டிருந்தா மன்னிச்சிருங்க’.. என்று குறிப்பிட்டார்.

இதை அடுத்து அதே போல் காமெடி பழனி.,யும் வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img