மழை வேண்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
spl pooja for rain - 2026
கருவூர் தொழில்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று நடைபெற்றது!
கருவூர் தொழில்பேட்டை அறச்சாலை பத்ரகாளியம்மன் ஆலய 28 – ஆம் ஆண்டு விழாவும், மழை வேண்டி கூட்டு வழிபாடும்’ அம்மன் திருவீதி உலாவும் இன்று காலை நடைபெற்றது.
அறச்சாலை நிறுவனர் காளிமுத்து ஐயா தலைமையில் கெளரவ தலைவர் மேலை -பழநியப்பன், க.ப.பாலசுப்பிரமணியன் லயன் கார்த்திகேயன் முன்னிலையில் அபிஷேகம் சிறப்பு ஹோமம் நடைபெற்று மழை வேண்டி கூட்டு வழிபாடு ஜெகன்னாத ஓதுவார் பாடல் இசைக்க நடை பெற்றது கோபால் தர்மன் சண்முகம் மருதை கணேஷ் அபிராமி ருத்ரா உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அறச்சாலை பத்ர காளியம்மன் புறப்பாடும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை  ஆநிலை பாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.