மதக்கலவரத்தை தூண்டும் எஸ்ரா சற்குணம் மீது இந்து மக்கள் கட்சி புகார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

esra sargunam - 2026

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதுகிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சீர்காழி காவல் நிலையத்தில்

இந்து மக்கள் கட்சியின் சார்பில்
இன்று 21.06.2019 புகார் அளிக்கப்பட்டது.

அதில்… சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் எஸ்றா சற்குணம். இவர் கிறிஸ்தவ பாதிரியாராக உள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் இவரது மேடைப் பேச்சு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் “இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம் .அப்படி ஒரு மதமே கிடையாது. இதையெல்லாம் எடுத்துக் கூறுங்கள். நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் ஏற்கவில்லை என்று சொன்னால் அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்துங்கள். அதைப்பற்றி பரவாயில்லை. கடவுளே மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது என்று சொல்லி முகத்தில் குத்தி ரத்தம் வருவது மாதிரி செய்து விட்டு அதன் பிறகு ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தொடர்ந்து உங்கள் பணிகளை செய்யுங்கள்.” என்று பேசியிருக்கிறார் .

தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார் .கடந்த சில மாதங்களுக்கு முன் வன்னிய சமுதாயத்தை தவறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார்.

இந்துக்களின் முகத்தில் குத்தி ரத்தம் வரவையுங்கள் என்ற இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதப் பிரசாரம் என்ற பெயரில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையல் செயல்படும் கிறிஸ்தவ
பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது உரிய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்று கொள்ளிடம்  ஜெ. சுவாமிநாதன் புகார் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.