கோயில் பாரம்பரிய விழாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் நெல்லை போலீஸ்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

Published:

tenkasi amman temple - 2026

நெல்லை மாவட்டத்தில் காவல்துறை தேவை இன்றி தாங்களாகவே முன் வந்து கோயில் விழாக்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு தடை போட்டு வருகிறது இந்த அடக்குமுறை நீடித்தால் வருங்காலங்களில் கோயில் கொடை விழாக்களின் பாரம்பரிய நடைமுறை வழக்கத்தில் இல்லாமல் அறவே ஒழிந்து விடும் அபாயம் உள்ளது என்று இந்துக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்

இஸ்லாமியர்கள் தடைபோடும் முன்னதாகவே காவல்துறையினர் தாங்களாகவே  இஸ்லாமியர்களுக்கு இடைஞ்சலாக  இருக்கும் என்று கூறி ஹிந்துக்களின் கிராமிய பண்பாட்டு ஆலய விழாக்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

TSI ULGAMMAN - 2026அன்மையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் அம்மன் ஆலய கொடை விழா மற்றும் கிராமிய விழாக்களில் ஸ்பீக்கர் கட்டக்கூடாது என்றும் மேளம் அடிக்கக் கூடாது என்றும் சத்தம் போட்டு சாமி கும்பிட கூடாது என்றும் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து காவல்துறையினர் அடக்குமுறையில் ஈடுபட்டனர்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தங்கள் கோயில் கொடை விழாக்களை கொண்டாடி வந்த இந்துக்கள் இதுபோன்று சத்தம் ஏதும் இல்லாமல் மௌனமாக அமைதியாக சாமி படத்தையும் விக்கிரகத்தையும் வைத்து கும்பிடுவது சாமி கும்பிடுவது போல் இல்லை ஏதோ மயானத்தில் இருப்பது போல் தோன்றியது என்று மனம் வெதும்புகின்றனர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இந்நிலையில் தென்காசி அருகிலுள்ள பாவூர்சத்திரம் ஆலங்குளம் கடையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இந்துக்கள் கூட்டமைப்பினர் ஒரு தகவலை வெளியிட்டனர்

அந்தத் தகவல் இதுதான்….

பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், சுரண்டை சுற்று வட்டார இந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்;

முன்னோர் காலத்தில் இருந்து நமது இந்து கோவில்களில் கொடைவிழாக்கள் ஆட்டம், பாட்டம், கச்சேரி என சிறப்பாக நடைபெற்று வந்தது..

சமீப காலமாக போலீஸ் கெடுபிடியால் குறிபிட்ட நேரம் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது..

வில்லிசை நிகழ்ச்சி கூட நடத்த முடியாமல் கொடைவிழாவை சரியாக நடத்த முடியவில்லை..

ஆதலால் நீண்ட காலமாக நாம் நடத்தகூடிய இந்து பாரம்பரிய திருவிழாக்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வருகிறது..

இதனை கண்டித்து வருகிற 23.6.19 (ஞாயிறு) அன்று மாலை 4மணிக்கு பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது..

ஆகையால், நமது சுற்று வட்டார இந்து கோவில் வரிதாரர்கள் அனைவரும் அனைத்து ஜாதி மக்களும் இந்து என்ற உணர்வோடு தவறாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்புபோல் எந்தவித கட்டுபாடுகளும் இல்லாமல் கொடைவிழா நடைபெற அனுமதி வழங்கிட வாரீர்! வாரீர்!

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

நமது சுற்றுவட்டார கோவில் நிர்வாகிகளுக்கு இதனை உடனே தெரியபடுத்தி 23.6.19 (ஞாயிறு) மாலை 4 மணிக்கு ஒவ்வோரு ஊர் வரிதாரர்கள் அனைவரையும் அந்தந்த கோவில் நிர்வாகிகள் தலைமையில் வேன், ஆட்டோ களில் அழைத்து வர வாட்ஸ்அப் நண்பர்கள் ஏற்பாடு செய்யுங்கள்..

ஆடி மாதம் கொடைவிழாவிற்கு இன்னும் 1மாதம் தான் உள்ளது.. அதனால் இந்த போராட்டம் வெற்றியடைய அனைத்து வரிதாரர்களும் தவறாமல் கலந்து கொள்ள வருமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்..

கோவில் கொடைவிழாவின் போது எப்படி அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்களோ அதைபோல் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..

இடம்; பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பு
நேரம்; மாலை 4 மணி

Related articles

Recent articles

spot_img