ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்…அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்!

“ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா

( “என்னை கும்பிட்டா மட்டும் நல்லது நடந்துடாது. நான் சொல்றபடி கேட்டாத்தான் நல்லது நடக்கும்.” )(ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி போட்டுக்கொண்ட ஒரு சுயநலமா இருந்த செல்வந்தனுக்கு அறிவுரை)
62049358 894495094236897 3477664543176392704 n 2 - 2026

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன். புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(47) தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பெரியவா யாத்திரையின் போது திருக்கோவிலூர் அருகில் ஒரு ஊரில் தங்க நேர்ந்தது.அந்த சமயத்தில் மழை பொய்த்து போய் அந்த ஊரே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஒரு செல்வந்தரின் வயக்காட்டிலும் அங்குள்ள கிணற்றிலும் தண்ணீர் வற்றாமல் சுரந்தபடி இருந்தது.அந்த செல்வந்தரோ ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி போட்டுக்கொண்டு விட்டார்.

இதனால் ஊரிலுள்ளோர் நெடுந்தூரம் போய் கிடைக்கிற இடத்தில் தண்ணீர் கொண்டுவந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 21 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பெரியவர் வந்து தங்கவும் அவரிடம் மழை பெய்ய வேண்டும், எங்கள் குறை நீங்க வேண்டும் என்றும் வேண்டி நின்றனர். இந்நிலையில் அந்த செல்வந்தரும் தரிசனம் செய்ய வந்தார்.

வந்த செல்வந்தரிடம் ஒரே புலம்பல்.

“சாமி, என்கிட்ட பணம், காசு இருக்குன்னு பேர்தானே ஒழிய என்னை யாரும் மதிக்கிறதேயில்லை.ஒரு புழுவைப் பார்க்கிற மாதிரிதான் பார்க்கிறாங்க.அதனாலேயே என் மனது மாதிரியே இந்த ஊரும் வறண்டு கிடக்குது” என்றார்.

அதைக்கேட்ட பெரியவரும்,”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று திரும்பிக்கேட்டார்.

“உங்களைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க,அதான் வந்தேன். இனி நல்லது நடந்தா சரி..” என்றார்.

“என்னை கும்பிட்டா மட்டும் நல்லது நடந்துடாது. நான் சொல்றபடி கேட்டாத்தான் நல்லது நடக்கும்.”

“சொல்லுங்க.என்னால முடிஞ்சா கட்டாயம் கேட்டு நடந்துக்கிறேன்…”

“உங்களால நிச்சயம் முடியும்.உங்க மனசு வறண்டு கிடக்கிறதாலதான் ஊரும் வறண்டிருக்குன்னு சொன்னீங்கதானே?”

“ஆமா சாமி…நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”

“அப்ப நீங்க சந்தோஷத்துக்கு மாறினா ஊரும் சந்தோஷமாயிடும்ன்னுதானே அர்த்தம்?”

“ஆனா என்னால ஆகமுடியலையே…என் பேச்சை எல்லாரும் கேட்டாத்தானே சந்தோஷப் படமுடியும்?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 27 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“நீங்க முதல்ல உங்க கிணத்தைச் சுற்றி போட்டுள்ள வேலியைஎடுத்துடங்க. எல்லாரையும் தண்ணி எடுத்துக்க அனுமதியுங்க.அப்புறம் பாருங்க…”-பெரியவா

“சாமி, நான் எனக்கு சொந்தமான கிணத்தைத்தானே பாதுகாப்பாக மூடி வச்சிருக்கேன்.இது எப்படி தப்பாகும்?”

“எதுவும் நமக்கு உண்மைல சொந்தமில்ல..உங்க உடம்பையே எடுத்துக்குங்க..உயிர் பிரியப்போறவரை இது உங்க கூடதானே இருக்கப்போகுது..அதனால இது இறப்புக்கு பிற்கு கூட வந்துட முடியுமா?”-பெரியவா

“இப்படி தத்துவம் பேசினா எப்படி சாமி? இருக்கிற தண்ணியை நான் தானம் பண்ணிட்டு என் நிலத்துக்கு என்ன செய்வேன்?”

“கல்வியும் தண்ணியும் கொடுக்கக் கொடுக்கத்தான் பெருகும். நீங்க ஊர் நல்லா இருக்கட்டும்னு முதல்ல நினைங்க. பிறகு பாருங்க…”-பெரியவா.

“அப்படி செஞ்சா மழை நல்லா பேஞ்சு பிரச்னை தீர்ந்துடமா?”

“நிச்சயமா..ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா

“சாமி உங்க பேச்சை நான் நம்பலாமா?”

“தாராளமாக நம்புங்க. மனசார எல்லாருக்கும் தண்ணி கொடுங்க நானும் உங்களுக்காக அந்த ஈஸ்வரன் கிட்ட வேண்டிக்கிறேன்.”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“சரிங்க சாமி, இப்பவே போய் வேலியை எல்லாம் எடுத்துட்டு யார் வேணா வந்து எவ்வளவு வேணா தண்ணி எடுத்துக்குங்கன்னு தண்டோரா போட்டுட்றேன்” என்று கூறிவிட்டு சென்ற செல்வந்தர் அப்படியே நடந்துகொண்டார்.

ஊரார் மனம் குளிர்ந்து போனது. யார் சொன்னாலும் கேட்காத செல்வந்தர் பெரியவர் சொல்லி கேட்டதை அதிசயமாகக் கருதினர்.

இத்தனைக்கும்ஊரார் பெரியவரிடம் அந்த செல்வந்தர் பற்றியோ நீருள்ள கிணறு பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

அவ்வளவையும் பெரியவர்தன் ஞானதிருஷ்யாலே தெரிந்து கொண்டு செயல்பட்டார்.அதன் பிறகு இரண்டு நாளில் அந்தஊரில் நல்ல மழை பெய்தது. அந்த செல்வந்தருக்கும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories