சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

isis-letter சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சென்னையில் ஏப்ரல் 24-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் பிரஸ் கிளப் ஆகியவற்றுக்கு இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், சென்னையில் உள்ள 50 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்.. இவர்களில் 10 பேரை கண்டிப்பாக நாங்கள் சுட்டுக் கொல்வோம். அத்துடன் கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பைப் போல வரும் 24-ந் தேதி சென்னையிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? உண்மையில் ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள்தான் அனுப்பினரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.