இலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….!

Published:

silpa 3 - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் நிதியாண்டிற்கு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20 முதல் 40 வயது வரையுள்ள தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 4-ஆம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று அல்லது ரேஷன் கார்டு, தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 மாத கால பயிற்சி சான்றிதழ்), வயது சான்று, ஜாதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் -2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை, நலிவுற்ற மகளிர் எனில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி.மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-627002. தொலைபேசி எண்-0462-2576265 தொடர்பு கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img