முறைப்படி இன்று பதவியேற்றார் டிஜிபி திரிபாதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

IMG 20190630 WA0022 - 2026

தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றார்.

1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் திரிபாதி. இவர் தமிழகத்தின் டி.ஜி.பி. ஆக 2 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

இதை அடுத்து இன்று முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண்டார் திரிபாதி.

இதன் பின்னர் பேசிய டி.கே. ராஜேந்திரன், எனது காவல்துறை பணி நிறைவுக்கு வந்த அதிகாரிகளுக்கு நன்றி என்று கூறினார்.

மேலும் ஜெ. மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஒகி, கஜா புயல், தேர்தல் என பல சவால்களை சந்தித்துள்ளோம்.

மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு தொடங்கி உள்ளோம்…

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை கடுமையான சோதனைகள், சவால்களை சந்தித்துள்ளது. சட்டப்படி செயல்பட்டேன், 33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன் என்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற டிகே ராஜேந்திரன் கூறினார்.

பின்னர் திரிபாதி பேசிய போது… தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை காக்கவும் குற்றங்களை தடுக்கவும் முன்னுரிமை தரப்படும்…

பாரம்பரிய மிக்க தமிழக காவல்துறை தலைவராக பொறுப்பேற்றதில் பெருமையடைகிறேன் என்றார் புதிதாக பதவியேற்ற டிஜிபி திரிபாதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.