பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

mukilan tirupathi arrest - 2026

ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸில் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி திடீரென காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் என்று என்று கூறப் பட்ட முகிலன், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப் பட்டார். பின்னர் அவரை, திருப்பதியில் இருந்து சென்னைக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

முகிலனிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக, முகிலன் மீது குளித்தலையைச் சேர்ந்த பெண்  இசை என்ற ராஜேஸ்வரி குளித்தலை போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் புகார் சிபிசிஐடி வசம் மாற்றப் பட்டு, அவர் விசாரிக்கப் படவுள்ளார் என்று கூறப் பட்டது.

முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

இதனிடையே, வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.